×

எம்ஜிஎம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அதிநவீன புதிய எக்மோ மையம் திறப்பு

சென்னை: சென்னையில் குழந்தைகள் மற்றும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய எக்மோ மையம் எம்ஜிஎம் மருத்துவமனையில் நேற்று திறக்கப்பட்டது. இதில்எம்ஜிஎம் ஹெல்த்கேரின் இதய அறிவியல் மைய தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் அதன் இணை இயக்குநர் சுரேஷ் ராவ், எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழும தலைமைசெயல் அலுவலர் ஹரீஷ் மணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எம்ஜிஎம் ஹெல்த்கேரின் இதய அறிவியல் மைய தலைவர் டாக்டர். பாலகிருஷ்ணன் கூறியதாவது: எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்காக மையப்படுத்தப்பட்ட எக்மோ மையம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. சிறார்களுக்கான உயிர்காப்பு தீவிர சிகிச்சை சேவையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இது இருக்கும். மிக நவீன மருத்துவ சிகிச்சை சேவைகள் அதுவும் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளுக்கு உயிரை காக்கும் ஆதரவின் வெற்றிகரமாகத் திகழும் எக்மோ தொழில்நுட்பத்தை வழங்குகிறது நாங்கள் கொண்டிருக்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கு நேர்த்தியான எடுத்துக்காட்டாக இந்த எக்மோ மையம் திகழ்கிறது. இதன் மூலம் கடும் பாதிப்பிலிருந்து மீண்டு குணம் பெறுவதற்கும் நம்பிக்கை தருவதற்கும் சிறப்பான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை இந்த இளம் நோயாளிகளுக்கு நாங்கள் தருவோம் என உறுதி அளிக்கிறோம்.

The post எம்ஜிஎம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அதிநவீன புதிய எக்மோ மையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : ECMO ,Center for Children ,MGM Hospital ,Chennai ,
× RELATED திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள்...