×

தன்னிச்சையாக நில எடுப்பு பணி என்.எல்.சிக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: என்.எல்.சி. நிர்வாகம் தன்னிச்சையாக நில எடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கண்டனத்துக்கு உரியது என பல்வேறு கட்சி தலைவர்கள் கூறினர். எடப்பாடி பழனிசாமி(அதிமுக பொதுசெயலாளர்): தமிழ்நாட்டின் அப்போதைய தலைமைச் செயலாளர் தலைமையில், கடந்த மே மாதம் 2-ம் தேதியன்று அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்தினர் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், புவனகிரி தொகுதி எம்எல்ஏ கலந்து கொண்டு, என்.எல்.சி. நிர்வாகம் அப்பகுதி மக்களின் கருத்தை கேட்டுத்தான் நில எடுப்பு செய்ய வேண்டும் என்று உறுதிபட எடுத்துரைத்தார்.

சட்டமன்ற உறுப்பினரின் கடுமையான எதிர்ப்பை ஏற்றுக்கொண்ட அப்போதைய தலைமைச் செயலாளர், விரைவில் இதேபோல் மற்றொரு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெறும் என்றும், அதுவரை எந்தவிதமான நில எடுப்புப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் என்.எல்.சி. நிர்வாகத்தை பணித்தார். ஆனால், தலைமைச் செயலாளர் மாறியவுடன் என்.எல்.சி. நிர்வாகம் தன்னிச்சையாக இன்று நில எடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு; சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிறுவனத்தை வலியுறுத்துகிறேன்.

(தலைவர் தேமுதிக ): கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் விளை நிலங்களை அழித்து, அதனை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இரவோடு இரவாக நெல் வயல்களுக்குள் பொக்லைன் இயந்திரங்களை இறக்கி, பயிர்களை அழித்து விட்டனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களை எதிர்த்து கொண்டு வரப்படும் எந்த திட்டங்களும் இறுதியில் தோல்வியில் முடிவடையும். நெற்பயிர்களை அழித்து விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி தேமுதிக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என என்எல்சி நிர்வாகத்தை எச்சரிக்கிறேன்.

The post தன்னிச்சையாக நில எடுப்பு பணி என்.எல்.சிக்கு தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : N. l. Chiku ,N. l. RC ,
× RELATED என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கை:...