×

திருப்புக்குழி, மொளச்சூரில் ரூ.103.70 லட்சத்தில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு

 

காஞ்சிபுரம்: திருப்புக்குழி, மொளச்சூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.103.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.103.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புக்குழி ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்தினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, சுகாதார நிலைய மருந்தகத்தினை ஆய்வு செய்து, மருந்துகள் இருப்பு மற்றும் அனைத்து மருந்துகளும் கையிருப்பு உள்ளனவா என கேட்டறிந்தார். ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், பயிற்சி கலெக்டர்கள் அர்பிட் ஜெயின், சங்கீதா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்புக்குழி, மொளச்சூரில் ரூ.103.70 லட்சத்தில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruppukuzhi, Molachur ,Kanchipuram ,Government Primary Health Center ,Tiruppukuzhi ,Molachur ,Primary Health Center ,
× RELATED வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்