×

ஆர்.கே. பேட்டை அண்ணாமலை மகளிர் கல்லூரியில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் உயர்த்துவது குறித்து விழிப்புணர்வு: சந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு

பள்ளிப்பட்டு: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் உயர்த்துவது குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்று தாய்மார்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை அருகே வெள்ளாத்தூர் அண்ணாமலை மகளிர் கல்லூரியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகள் கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பாலின பிறப்பு விகிதம் உயர்த்துவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, உதவி கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமை வகித்தார். துணை ஆட்சியர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் சுமதி வரவேற்றார். நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் பங்கேற்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் அங்கன்வாடி மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைந்து தாய்மார்களுக்கு நடத்திய வினாடி வினா, கொழுகொழு குழந்தை போட்டி, கோலப்பட்டிகளில் வெற்றி பெற்ற தாய்மார்கள், குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.25 ஆயிரம் நிதி வைப்பீடு செய்யப்பட்டு அதற்கான ரசீது தாய்மார்களிடம் வழங்கினார். மேலும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் உயர்த்துவது, பெண் குழந்தைகளுக்கு கல்வி, ஊட்டச்சத்து அவசியம் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, அண்ணாமலை கல்லூரி தாளாளர் அசோகன், ஒன்றிய குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

The post ஆர்.கே. பேட்டை அண்ணாமலை மகளிர் கல்லூரியில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் உயர்த்துவது குறித்து விழிப்புணர்வு: சந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : RK ,Annamalai Women's College ,Pettaya ,Chandran ,MLA ,Pallipattu ,S. Chandran ,Pettai ,Dinakaran ,
× RELATED ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி...