×

கவரப்பேட்டை – சத்தியவேடு நெடுஞ்சாலையில் வீட்டுமனைகளுக்கு சாலை தடுப்பு கண்டித்து சாலை மறியல்: அதிகாரிகள் சமரசம்

கும்மிடிப்பூண்டி: அரசால் விற்பனை செய்யப்பட்ட வீட்டுமனைகளுக்கு வழி விடாமல் சாலையில் தடுப்பு சுவர் அமைத்ததால் சாலை மறியல் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1985ம் ஆண்டு தமிழக அரசால் சுமார் 2000 வீடு கட்டுவதற்கு குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, சிலர் குடியிருப்பு கட்டி உள்ளனர். இதனை தொடர்ந்து, கவரப்பேட்டை – சத்தியவேடு நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கத்தின்போது, இதன் அருகாமையில் அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு சாலை நடுவே நெடுஞ்சாலை துறையினர் தடுப்பு அமைத்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் சாலை நடுவே போடப்பட்ட தடுப்பு அகற்றப்படாததால் ஆத்திரம் அடைந்த வீட்டுமனை உரிமையாளர்கள் நேற்று மாலை திடீரென கவரப்பேட்டை – சத்தியவேடு நெடுஞ்சாலையின் இருபுறமும் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும், எந்த காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் தாமதமானதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை நடுவே போடப்பட்ட தடுப்பு சுவரை துண்டித்து உடனடியாக அரசு வழங்கிய வீட்டு மனைகளுக்கு வழியை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

The post கவரப்பேட்டை – சத்தியவேடு நெடுஞ்சாலையில் வீட்டுமனைகளுக்கு சாலை தடுப்பு கண்டித்து சாலை மறியல்: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Garrapapet ,Sathyavedu highway ,Gummhippundi ,Thiruvallur ,Sathyavedu Highway Road Stir ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..!!