×

ஊத்துக்கோட்டையில் மோடி அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில், பல மாதங்களாக மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் மோடி அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல மாதங்களாக மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் மோடியின் பாசிச அரசை கண்டித்து, திருவள்ளூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில், ஊத்துக்கோட்டை விஏஒ அலுவலகம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் அறிவுச்செல்வன் தலைமை தாங்கினார். ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் சந்தோஷ், விஷ்ணுதரன், சுப்பிரமணி, சம்பத், ஆனந்தன், சண்முகமணி, மணிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அரசியல் குழு செயலாளர் நீலவானத்து நிலவன், மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், மாநில மாவட்ட நிர்வாகிகள் சாம்சன், நீலன், நெடுஞ்செழியன், தமிழ்செல்வன், ஜீவா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியில் நகர பொருளாளர் ஜெபா, அஜய்குமார் நன்றி கூறினர்.

The post ஊத்துக்கோட்டையில் மோடி அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Freedom Panthers ,Modi government ,Uthukottai ,Oothukottai ,Liberation Tigers ,Manipur riots ,
× RELATED தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்...