×

அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மரக்கன்றுகள் நடும் விழா: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி புதுநகர் பகுதி சதுப்பு நிலப்பகுதி கால்வாய் ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி உள்ளது. இங்குள்ள, புதுநகர் பகுதியில் வடசென்னை அனல்மின் நிலைய பக்கிங் காம் கால்வாய் அருகில் உலக சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மண் அரிப்பை தடுக்கவும், சுற்றுச்சூழலை மாசுக்கட்டுப்பாட்டை தடுக்கவும், கால்வாய் கரை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்றுமுன்தினம் நடந்தது.

இதை, ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தொடக்கி வைத்தார். பின்னர், 120 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட வனசரக அதிகாரிகள் பன்னீர்செல்வம், ராமமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் கோமதிநாயகம், ஊராட்சி செயலர் ஆனந்தன் மற்றும் அத்திப்பட்டு புதுநகர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

The post அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மரக்கன்றுகள் நடும் விழா: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Panchayat Sapling Planting Ceremony ,Panchayat ,President ,Ponneri ,Meenjoor Union ,Pudunagar ,Area Sapling Planting Ceremony ,Level ,Dinakaran ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு