×

நெய்தவாயல் ஊராட்சியில் ரூ.16 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் நெய்த வாயல் ஊராட்சி மவுத்தும்பேடு கிராமத்தில் ரூ.16 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது நெய்த வாயல் ஊராட்சி உள்ளது. இங்குள்ள, மவுத்தம்பேடு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று முத்து மாரி அம்மன் கோவில் தெருவில் நடந்தது.

இதில், சிறப்பு அழைப்பாளராக துரை சந்திரசேகர் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, வார்டு உறுப்பினர்கள் சரளா கோவிந்தராஜ், ரவிவர்மன், நந்தகுமார், ரத்னா தேவன், அங்கன்வாடி பணியாளர் துளசி, கிராம நிர்வாகிகள் அப்பாவு, சிங்காரம், கோதண்டம், பிரசாத், ஸ்ரீதர் ராஜேந்திரன், ஆனந்தன், கண்ணன், பார்த்திபன், குணா, ராஜசேகர். காங்கிரஸ் நிர்வாகி அத்திப்பட்டு புருஷோத்தமன் உள்ளிட்ட மகளிர் அணி, இளைஞரணி பலர் கலந்து கொண்டனர்.

The post நெய்தவாயல் ஊராட்சியில் ரூ.16 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Bhumi Pooja ,Anganwadi center ,Neidawayal ,MLA ,Ponneri ,Meenjoor Union ,Neytha Vayal ,Panchayat ,Mauthumpedu ,Anganwadi ,
× RELATED கணக்கனேந்தல் கிராமத்தில் பாழடைந்து...