×

ஓவியர் மாருதி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: ஓவியர் மாருதி அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் வார இதழ்களில் தமது தூரிகையால் கோலோச்சி தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற ஓவியர் மாருதி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். தனித்துவம் மிக்க தனது ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர். முத்தமிழறிஞர் கலைஞரின் திரைப்படங்களில் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

The post ஓவியர் மாருதி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mukhya Mukhya ,Maruti ,G.K. ,stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister of ,Mukhya ,painter ,G.K. Stalin ,B.C. G.K. ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...