×

பாலக்காடு அருகே வனத்தில் இறந்து கிடந்த பெண்குட்டி யானை

பாலக்காடு: பாலக்காடு அருகே வனத்தில் இறந்து கிடந்த பெண் குட்டியானை சடலத்தை வனத்துறையினர் மீட்டனர். பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு வனப்பகுதியில் காட்டு யானைகளின் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு வயது உடைய பெண் குட்டி யானை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்தது. இந்த நிலையில் நேற்று புதுசேரி செக்‌ஷன் வனத்துறையினர் கஞ்சிக்கோடு, ஐயப்பன் மலை, வேலஞ்சேரி, வலியேறி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகளின் கூட்டத்தில் இருந்து பிரிந்த சுமார் 1 வயது உடைய பெண் குட்டியான வலியேறி மலை அடிவாரத்தில் இறந்து கிடந்தது.

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சடலத்தை ஆய்வு செய்ததில் உடலில் காயம் ஏதும் இல்லை என தெரியவந்தது. இதை தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் டேவிட் இப்ராஹிம் தலைமையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு யானையின் சடலம் அங்கு புதைக்கப்பட்டது.

The post பாலக்காடு அருகே வனத்தில் இறந்து கிடந்த பெண்குட்டி யானை appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Kanjikodu ,Dinakaran ,
× RELATED தனியாக பயணம் செய்கின்ற பெண்களின்...