×

தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குட்டையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் மாணவர்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குட்டையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்2 வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் அருகே உள்ள குட்டையில் மத்திய சிறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி உள்ளது. பல மாதங்களாக கழிவுநீர் வெளியேறாமல் உள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளதால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே பல மாதங்களாக கழிவுநீர் குட்டை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் அப்பகுதி அசுத்தம் ஏற்படுகிறது. அப்பகுதியை சுற்றியுள்ள கடைக்கார்களும் குப்பைகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்படுகிறது. கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைக்காலங்களில் மேலும் அதிகமாக இருக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் பள்ளி மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அந்த கழிவுநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குட்டையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் மாணவர்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thorapadi Government Higher Secondary School ,Vellore ,Thorappadi Government High School ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...