×

தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.133.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

தஞ்சை: சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.133.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாநகராட்சியில் பல்வேறு கருத்தரங்கம், மாநாடு, கண்காட்சி, கலந்தாய்வுகள் போன்றவை நடத்துவதற்கு ஏதுவாக 6.4 ஏக்கர் நிலப்பரப்பில், 13,076 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில், அடித்தளம் மற்றும் முதல் தளத்துடன், கலந்தாய்வு மற்றும் கருத்தரங்கு அறைகளுடன், 1500 இருக்கைகள் கொண்ட 61 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையக் கட்டடம்; தஞ்சாவூரில் ஆம்னி பேருந்துகளின் நிறுத்தங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக 5400 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன் கடைகள், பயண அலுவலகம், கழிப்பறைகள்,

குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் 25 பேருந்துகள் நிற்கும் வகையில் 10 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையம்; தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளியக்ரஹாரம், கவாடிக்கார தெரு, குறிஞ்சி தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சின்னக்கடை தெரு, கௌராஷ்டிரா தெரு, நீலகிரி, கூட்டுறவு காலனி, புதுப்பட்டினம், கரந்தை, ராஜப்பா நகர், ஹசிங் யூனிட், அண்ணா நகர், தென்கீழ் அலங்கம் ஆகிய இடங்களில் உள்ள 14 மாநகராட்சி பள்ளிகளில் தொடுதிரை தொலைக்காட்சிகள், கணினிகள், குளிர்சாதன வசதிகள், சிசிடிவி கேமராக்கள் போன்ற வசதிகளுடன் 7 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் சீர்மிகு பள்ளிகளாக மாற்றியமைக்கப்பட்ட பணிகள்;

மாநகராட்சிக்கு சொந்தமான பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள சிராஜிதீன் நகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 12,500 யூனிட் மின் உற்பத்தி செய்திடும் வகையில் 15 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 3 MWP சூரியஒளி மின்நிலையம்; அருளானந்த நகர் பகுதியில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பூங்கா (STEM Park); மூன்று பகுதிகளாக கட்டப்பட்டுள்ள கடைகள், வாகன நிறுத்துமிடம், மின்தூக்கி, குளிர்சாதன வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளுடன் 15 கோடியே 61 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட காந்திஜி வணிக வளாகம்; கரந்தை பகுதியில் உள்ள கருணா சுவாமி கோவிலில் உள்ள குளத்தை சுற்றி நான்கு திசைகளிலும் உள்ள கரைகளை சீரமைத்து,

குளத்திற்கு அருகில் உள்ள வடவாறு ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு கால்வாய் அமைத்து, பேவர் பிளாக் நடைபாதை, இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்ட வசதிகளுடன் 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட கருணா சுவாமி குளம்; கவாஸ்காரத் தெருவில் உள்ள அழகி குளத்தை சுற்றி நான்கு திசைகளிலும் உள்ள கரைகளை சீரமைத்து, சுற்றுச்சுவர், பேவர் பிளாக் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அழகிகுளம்; தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள சரபோஜி மார்க்கெட் அருகில் 9483 சதுர அடி கட்டட பரப்பளவில், தரை தளத்தில் 16 கடைகள், முதல் தளத்தில் 27 கடைகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறிஞர் அண்ணா வணிக வளாகம்;

தேசிய நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரசு இராஜா மிராசுதார் மருத்துவமனையில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நோயாளிகளுடன் உடனிருப்போர் தங்குமிடம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புற்றுநோய் பிரிவு பகுதியில் நோயாளிகளுடன் உடனிருப்போர் தங்குமிடம், 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீப்புண் வார்டு பகுதியில் நோயாளிகளுடன் உடனிருப்போர் தங்குமிடம்; என மொத்தம் 133 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம், அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம், துரை. சந்திரசேகரன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ். சிவராசு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கே. சரவணகுமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.133.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Municipal Corporation ,G.K. Stalin ,Tanjai ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Thanjavur Municipality ,
× RELATED தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே சேதமான பாதாள சாக்கடை மூடி சீரமைப்பு