×

காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த விவகாரம்: புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு

மதுரை: காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பில்லிபட்டி பகுதியை சேர்ந்த ராஜ்குமார், உயர்நீதிமன்ற மதுரக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பில்லிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த 15 பேர் திருச்சி மாவட்டம் ஏலூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசுதின விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக பிப்.15ம் தேதி உடற்கல்வி ஆசிரியருடன் சென்றுள்ளனர்.

இதையடுத்து போட்டியில் பங்கேற்றவுடன், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றிபார்த்துவிட்டு, அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது தமிழரசி, இனியா, லாவண்யா, சோபியா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி பலியாகினர்.

விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற பள்ளி மாணவிகளை பாதுகாப்பதும் பராமரிப்பதும் ஆசிரியர்களின் கடமையாகும், மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் பள்ளி மாணவிகளின் மரணத்திற்கு நியாயமான, முறையான விசாரணை இல்லை எனவும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரக்கிளையில் நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அஜாக்கிரதையால் ஏற்பட்ட மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மனுதாரர்தரப்பில் உடன் சென்ற 11 மாணவிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் இதுகுறித்து சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தேவை எனவும் வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி இதே விசாரணையை புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த விவகாரம்: புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kaviri river ,High Court Branch ,Pudukkotta ,CBCIT ,Madurai ,CPCIT ,Khavikottai ,Kaviri ,CBCID ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான...