×

கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டு தீ

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் ரோட்ஸ் தீவு, எவியா தீவு, கோர்ஃபு தீவு ஆகியவற்றில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த காட்டுத்தீ கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தீயை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்த தீயினால் வெப்பம் கடுமையாக அதிகரித்து, பல இடங்களில் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டுள்ளது. பலர் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் சுற்றுலா வந்தவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். ரோட்ஸ் தீவு மற்றும் கோர்ஃபு தீவில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், மீட்பு பணியை துரிதப்படுத்த பிற நாடுகளின் உதவியை கிரீஸ் அரசு நாடியுள்ளது. கிரீஸில் இதே போன்று 2007 மற்றும் 2021ல் காட்டுத்தீ ஏற்பட்ட போது, ரஷ்ய விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பயன்படுத்தி அதிவேகமாக தீயை அணைக்கலாம் என அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பனோஸ் கம்மெனோஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 2 விமானி உயிரிழந்தனர்.

The post கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டு தீ appeared first on Dinakaran.

Tags : Greece ,Athens ,Rhodes ,Evia ,Gorfu ,Fire ,Dinakaran ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்