×

அருவியில் குளிக்க சென்றபோது திடீர் வெள்ளம்; சுற்றுலா பயணிகள் 70 பேர் வனப்பகுதியில் சிக்கி தவிப்பு: விடிய விடிய தேடும் பணி தீவிரம்

திருமலை: வனப்பகுதியில் உள்ள அருவியில் குளித்துவிட்டு திரும்பியபோது ஓடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 70 சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சிக்கினர். அவர்களை தேடும்பணி விடியவிடிய நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலம் வீரபத்ரவரம் கிராமத்தின் புறநகர் பகுதியில் முத்தியாலதாரா என்ற அருவி உள்ளது. வனப்பகுதியில் உள்ள இந்த அருவியில் குளிக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருவது வழக்கம். அதன்படி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மாலையில் அனைவரும் வீடு திரும்ப முயன்றனர். அப்போது வனப்பகுதியில் உள்ள ஓடையில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஓடையை கடக்க முடியாமல் அனைவரும் வனப்பகுதியில் சிக்கிக்கொண்டனர். சுமார் 70 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதனால் சுற்றுலா பயணிகளில் சிலர் செல்போன் மூலம் போலீசார் மற்றும் தங்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

எஸ்பி கவுஷ்ஆலம் தலைமையில் 6 தேசிய பேரிடர் மீட்பு படையினர் வனப்பகுதிக்கு விரைந்து சென்று சுற்றுலா பயணிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரமாக இருந்தாலும் விடியவிடிய தேடுதல் பணி நடந்தது. தொடர்ந்து இன்று 2வது நாளாக தேடுதல் பணி நடந்து வருகிறது. செல்போன் மூலம் சுற்றுலா பயணிகளிடம் பேசிய அதிகாரிகள், எந்த சூழ்நிலையிலும் ஓடையை கடக்க முயற்சிக்க வேண்டாம். நாங்கள் வந்து பாதுகாப்பாக மீட்போம் என அறிவுறுத்தியுள்ளனர்.

The post அருவியில் குளிக்க சென்றபோது திடீர் வெள்ளம்; சுற்றுலா பயணிகள் 70 பேர் வனப்பகுதியில் சிக்கி தவிப்பு: விடிய விடிய தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Sudde ,Tirumalai ,Dinakaran ,
× RELATED வீட்டை பூட்டி மருமகள் சாவியை...