×

தஞ்சாவூர் அருகே பழங்கால செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை பகுதியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரி கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவரது இடத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பித்தளை பெட்டி ஒன்று கிடைத்தது.

அதை திறந்து பார்த்தபோது பழங்காலத்து செப்பு நாணயங்கள் மற்றும் ஒரு பைசா நாணயங்கள் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்ட நாணயங்கள் இருந்தன. இது குறித்து வீட்டின் உரிமையாளர் தரப்பில் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் அய்யம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பழங்கால நாணயங்கள் அடங்கிய பெட்டியை வட்டாட்சியர் சக்திவேலிடம் ஒப்படைத்து அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்தனர்.

The post தஞ்சாவூர் அருகே பழங்கால செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kumbakonam ,Ayyampet ,Thanjavur… ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி