×

மகளிர் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்கா-நெதர்லாந்து போட்டி 1-1 என டிரா

வெலிங்டன்: 9வது உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும். இதில் வெலிங்டனில் இன்று நடந்த போட்டியில் இ பிரிவில் அமெரிக்கா -நெதர்லாந்து அணிகள் மோதின.

விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் நெதர்லாந்து 17வதுநிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடியாக 2வதுபாதியில்ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் அமெரிக்கா கோல் அடித்தது. பின்னர் கோல்எதுவும் விழாததால் 1-1என போட்டி சமனில் முடிந்தது.

The post மகளிர் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்கா-நெதர்லாந்து போட்டி 1-1 என டிரா appeared first on Dinakaran.

Tags : Women's World Cup Soccer ,USA ,Netherlands ,Wellington ,9th Women's World Cup ,Australia ,New Zealand ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!