×

திருவாரூர் முத்துப்பேட்டையில் அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு தின கொண்டாட்டம் கோலாகலம்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அலையாத்திக்காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஐக்கியநாடுகள் சபை 2016 ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதியை உலக அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது. அன்று முதல் ஆண்டுதோறும் அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அலையாத்திக்காடுகள் கடற்கரை ஓரங்களில் உள்ள சேறு கலந்த சதுப்பு நிலங்களிலும், உவர் நீரில் வளரக்கூடிய ஒருவகை தாவர இனம். இவை பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி செய்யும் இடமாகவும், கடற்கரையோர பகுதிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும் அமைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அலையாத்தி காடுகளாகும். இதன் மொத்த பரப்பளவு 12,020 ஹெக்டேர்.

முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திக்காடுகள் மூன்று பிரிவுகளாக காணப்படுகின்றன. தொடக்கப்பகுதி தில்லை மரங்களும், நடுப்பகுதியில் நரிகண்டல் மரங்களும், இறுதியாக அலையாத்தி மரங்களாகவும் காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று உலக அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அலையாத்திக்காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் அலையாத்தி காடுகளுக்கு படகுகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேபோல, பள்ளிகளில் அலையாத்திக்காடுகளின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கங்கள், மரக்கன்றுகள் நடுதல், சதுப்பு நிலப்பரப்புகளில் அலையாத்திக்காடுகளை உருவாக்குதல், கஜா புயலின் சீற்றத்தால் அழிந்த காடுகளை மறு நடவு செய்து உருவாக்குதல் மற்றும் பனைமரங்களை நடவுசெய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அலையாத்திகாடுகள் குறித்து அதிகளவில் செய்திகளை பதிவு செய்தனர்.

The post திருவாரூர் முத்துப்பேட்டையில் அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு தின கொண்டாட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Alayathikkadus Conservation Day ,Thiruvarur Muthupettai ,Muthuppet: ,Muthupet, Tiruvarur district ,United Nations Council ,Tiruvarur ,Muthuppettai ,
× RELATED நிழற்குடையில் ஆதரவற்ற நிலையில்...