×

திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வகுப்பறை பெயர் பலகையில் இருந்த தமிழ் எழுத்துகள் அழிக்கப்பட்டதால் அதிர்ச்சி..!!

திருவாரூர்: திருவாரூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வகுப்பறை பெயர் பலகையில் இருந்த தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தற்போது இந்த பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில், பள்ளியில் வகுப்பறை பெயர் பலகையில் இருந்த தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது. வகுப்பறை முகப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் வகுப்பறையின் பெயர் எழுதப்பட்டுள்ளது. தற்போது தமிழில் எழுதப்பட்ட பெயர் மட்டும் அழிக்கப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள எழுத்துகள் மட்டும் வகுப்பறை முகப்பில் அழிக்கப்படாமல் உள்ளன.

ஏற்கனவே எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்கள் வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் கேட்டபோது, வகுப்பறை மாற்றம் காரணமாக வகுப்பறை பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுதப்பட்டுள்ளன. விரைவாக தமிழ் மொழியிலும் வகுப்பறை பெயர்கள் எழுதப்படும் என தெரிவித்தார். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வகுப்பறை முகப்புகளில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வகுப்பறை பெயர் பலகையில் இருந்த தமிழ் எழுத்துகள் அழிக்கப்பட்டதால் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur Kendriya Vidyalaya School ,Thiruvarur ,Kendriya Vidyalaya School ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு