×

ஒராண்டில் 1.37 கோடி புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்த BSNL..! நாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்பு அமைச்சகம் பதில்

டெல்லி: BSNL தொலைத்தொடர்பு சேவையில் 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் வரை 1.37 கோடி புதிய வாடிக்கையாளர்களும், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 31.46 லட்சம் பேரும் இணைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்பு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் BSNL தொலைத்தொடர்பு சேவையில் இணைந்துள்ள வாடியாளர்கள் பற்றிய கேள்விகளுக்கு தொலைத்தொடர்பு அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில், BSNL தொலைத்தொடர்பு சேவையில் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் வரை 1.37 கோடி புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் BSNL தொலைத்தொடர்பு சேவையில் 31.46 லட்சம் இணைந்துள்ளதாக தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் Ported-Out வசதி மூலம் 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை 65.81 லட்சம் பேர் வெளியேறியுள்ள நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் வரை 2.77 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாகநாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்பு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

The post ஒராண்டில் 1.37 கோடி புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்த BSNL..! நாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்பு அமைச்சகம் பதில் appeared first on Dinakaran.

Tags : BSNL ,Ministry of Telecommunication ,Parliament ,Delhi ,Dinakaran ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு