×

அரசு செயல்படுத்திய திட்டங்களால் 6 ஆண்டுகளுக்கு பிறகு 2021-22ல் 119 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திருச்சி: 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை அளித்துள்ளார். மிக மிக பசுமையான நிகழிச்சியில் கலந்து கொள்ளகூடிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். அணைத்து துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என்று திமுக அரசு உழைத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

வேளாண் துறையை தலைசிறந்த துறையாக மாற்றி இருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என முதல்வர் புகழ்மிதுடன் தெரிவித்துள்ளார். மற்ற துறைகளை போல வேளாண்துறையை நினைத்தவுடனே வளர்த்துவிட முடியாத எனவும் வேளாண்துறையை வளர்க்க நிதி மட்டும் அல்ல நீர்வளமும் வேண்டும் என தெரிவித்துள்ளார். வேளாண்துறையில் பல புதிய திட்டங்களை தொடங்கியுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் வேளாண்துறை வளர்ச்சி அடைந்துள்ளதாவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு செயல்படுத்திய திட்டங்களால் 6 ஆண்டுகளுக்கு பிறகு 2021-22ல் 119 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. உரிய தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு 5.63 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி 47 ஆண்டில் சதையை எட்டியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் இலவச மின்இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மேலும் 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்க உள்ளோம் என்று முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post அரசு செயல்படுத்திய திட்டங்களால் 6 ஆண்டுகளுக்கு பிறகு 2021-22ல் 119 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MC ,G.K. Stalin ,Chief Minister MCM ,CM ,B.C. G.K. Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...