×

திருச்சியில் வேளாண் சங்கமம்-2023 விழாவை தொடங்கி வைத்து, விவசாயம் தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சியில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் ‘வேளாண் சங்கமம்- 2023’ மாபெரும் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு முதல் ஜூலை 29 வரை திருச்சி, கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண் சங்கமம் – 2023 விழாவை நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியினையும் முதல்வர் துவக்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சியில், வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள், புதிய வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கான வழிமுறைகள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தான கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், அரசின் திட்டப்பலன்களை பெறுவதற்கு முன்பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நுண்ணீர்ப் பாசனத்திட்டம், இயற்கை வேளாண்மை, ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய இயக்கம், தென்னையில் பயிர்ப்பாதுகாப்பு, பாரம்பரிய நெல் ரகங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில், செங்குத்து தோட்டம், நீரியல் தோட்டம், மாடித் தோட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதல், மதிப்புக்கூட்டுதல் போன்ற உழவர்களுக்காக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப்பதிவு மையம், தமிழ் மண்வள இணையதளம் மூலம் மண்வள அட்டை விநியோகம் போன்ற இணையவழி சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியில் விவசாயிகள் வாங்கிச் சென்று தங்கள் பண்ணையில் சாகுபடி செய்வதற்கேற்றவாறு, புதிய ரகங்களின் காய்கறி விதைகள், மா, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளில் ஒட்டு ரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்டக்கலவை உரங்கள், உயிர் உரங்கள், விதைகள் போன்ற இடுபொருட்களும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கருத்தரங்குகள், கொள்முதல் செய்பவர்-விற்பனையாளர் சந்திப்பு, பாரம்பரிய விவசாயிகளுக்கு விருது வழங்கப்படுகிறது.

The post திருச்சியில் வேளாண் சங்கமம்-2023 விழாவை தொடங்கி வைத்து, விவசாயம் தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Agriculture Sangam-2023 ,Trichy ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,Velan Sangam-2023 ,exhibition ,Tiruchi ,Agriculture-Farmer Welfare Department ,Dinakaran ,
× RELATED திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை...