×

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

 

ஈரோடு,ஜூலை27: ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரோடு ஊராட்சி பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் புதுப்பிக்கும்பணி, ரூ.3.78 லட்சம் மதிப்பீட்டில் 1 வகுப்பறை புதுப்பிக்கும் பணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதி திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை முதல் குமரன் நகர் வரை உள்ள சாலையை மெட்டல் போட்டு தார் சாலையாக அமைத்தல்,

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டும் பணி,மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி காலிங்கராயன் பாளையம் பகுதியில் 15வது நிதிக் குழு மாணியத் திட்டத்தின் கீழ், ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், லட்சுமி நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.14.52 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள

நாற்றுப்பண்ணை,மணக்காட்டூர் பகுதியில் ரூ.16.78 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி உள்பட ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது உதவி கலெக்டர்கள் (பயிற்சி) பொன்மணி, வினய்குமார் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Erode Panchayat Union ,Erode ,Berode Panchayat ,Panchayat Union Primary ,Dinakaran ,
× RELATED ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து