×

சிங்காநல்லூரில் நாளை மின்தடை

 

கோவை, ஜூலை 27: கோவை அருகே கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் 28ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜ் ரோடு, பாரதி நகர்,சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜா நகர், நீலிகோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திராநகர், பாலன்நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்ஜிஆர் நகர், ஹோம் காலேஜ் முதல் சிவில் ஏரோடிராம், வரதராஜபுரம், நந்தாநகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதூர் ஒரு பகுதி, மசக்காளிபாளையம், மெடிக்கல் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடைப்படும் என ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் கோவை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.

The post சிங்காநல்லூரில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Singhanallur ,Coimbatore ,Kallimadai ,Singanallur ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு