×

வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

கோவை, ஜூலை 27: கோவை அருகே உள்ள உப்பிலிபாளையம் கிருஷ்ணா கார்டனை சேர்ந்தவர் அற்புதராஜ் (58). இவர் தமிழக மின்சார வாரியத்தில் அதிகாரி. இவர் மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அற்புதராஜ் தனது குடும்பத்தினருன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். அப்போது இவரது வீட்டில் பின்பக்க கதவை உடைக்கபட்டிருத்தது. பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய், 3 வெள்ளி டம்ளர்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

வீட்டிற்கு திரும்பிய அற்புதராஜ் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

The post வீட்டில் 12 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Yumushraj ,Uppilipalayam Krishna Garden ,Tamil Nadu ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு