×

மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு

 

சிவகாசி, ஜூலை 27: மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் கோவில்பிள்ளை. இவரது மனைவி டயானா(38). 2008ல் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக டயானா கணவரை பிரிந்து தூத்துக்குடி சென்று விட்டார். இந்நிலையில் டயானா திருத்தங்கல்லில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு வந்த கோவில் பிள்ளை அவதூறாக பேசி கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Kovilpillai ,Thiruthangal KK Nagar.… ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை