×

வலங்கைமானில் காங். தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

 

வலங்கைமான், ஜூலை 27: வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமையை கண்டித்து வலங்கைமான் கடைவீதியில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மற்றும் ஐ என் டி யூ சி சார்பில் திருவாரூர் மாவட்ட தலைவர் குலாம்மைதீன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஒன்றிய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் அஹமது மைதீன், ஓட்டுனர் அணி தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் நகர தலைவர் கலியமூர்த்தி ஆகியோர்முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் காங்கிரஸ் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி கண்டன உரையாற்றினார். முன்னதாக மாநில அமைப்பாளர் பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் நாகராஜ் மருதமுத்து, உமாமகேஸ்வரி, சுதா, வேம்பு, கமலிபரக்கத் நிஷா, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வட்டார செயலாளர் விஜயகாந்த் நன்றி கூறினார்.

The post வலங்கைமானில் காங். தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Walangaiman ,Congress trade union ,Manipur ,Valangaimanil ,Congress ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் தாக்குதல் துரதிஷ்டவசமானது,...