திருவையாறு, ஜூலை 27: திருவையாறு தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்விளக்க பயிற்சி தனியார் பள்ளியில் தலைமையாசிரியர் தங்கமணி தலைமையில், உதவி தலைமையாசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் அருண்கணேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் காலங்களில் தீவிபத்தில், மழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, எப்படி முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தி பயிற்சி அளித்தனர். அதைத்தொடர்ந்து திருவாலம் பொழில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் பயிற்சி அளித்தனர். இதில் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை செயல் விளக்க பயிற்சி appeared first on Dinakaran.
