×

அறந்தாங்கியில் கோலாகலம் வீரமாகாளியம்மன் கோயில் தேரோட்டம்

 

புதுக்கோட்டை, ஜூலை 27:அறந்தங்கி வீரமாகாளியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து ேதர் இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வீரமாகாளியம்மன் கோயில் ஆடி மாத திருவிழா ஒரு மாதம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 14ம் தேதி பூச்சொரிதல் விழாவும், அதனை தொடர்ந்து கடந்த 18ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காப்பு கட்டுதல் உடன் முதல் நாள் திருவிழா ஆரம்பித்து வரும் 18.8.20203 புதன்கிழமை முடிய 30 தினங்கள் ஆடிப்பெரும் திருவிழா நடைபெறும். 30 நாள் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மதியம் அன்னதானம், இரவு நேரத்தில் பட்டிமன்றம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆடி திருவிழாவில் முக்கிய திருவிழா நாட்கள், பூச்சொரிதல் காப்பு கட்டுதல், இரண்டு நாள் தேரோட்டம் தெப்ப திருவிழா நடைபெறும். அதில் ஆவுடையார் கோயில் சாலை வ.உ.சி திடல் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும்.

நேற்று மாலை தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்காரர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் பெரிய கடை வீதி வழியாக சென்று பழைய ஆஸ்பத்திரி சாலையில் இருக்கும் அன்னபூரணி அம்மாள் சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயம் அருகே நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மாலை இரண்டாம் நாள் தேரோட்டம் துவங்கி பாரதிதாசன் சாலை வழியாக ஆவுடையார் கோவில் சாலை முகம் வழியாக வ.உ.சி திடல் அருகே நிலை நிறுத்தப்படும். எங்கும் இல்லாத வீரமாகாளி அம்மன் கோயில் இரண்டு நாள் தேரோட்டத்தில் அறந்தாங்கி நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை பொதுமக்கள் ஆயிரக்கணக்கான கலந்து கொள்வர். வீரமாகாளியம்மன் கோயில் தேரோட்டத்தில் அறந்தாங்கி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

The post அறந்தாங்கியில் கோலாகலம் வீரமாகாளியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Kolagalam Veeramakaliamman temple procession ,Aranthangi ,Pudukottai ,Veeramakaliamman temple procession ,Kolakalam Veeramakaliamman temple procession ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த...