×

கரூரில் செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 

கரூர், ஜூலை 27: கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகி நதியா தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஷீலா, மீனா, மாநில பொருளாளர் சாமிவேல் உட்பட சங்க நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், கிராமப்புற மருத்துவ சேவையை மேம்படுத்தும் வகையில் ஒரு சுகாதார வட்டாரத்துக்கு ஒரு செவிலியர் ஆலோசகர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து அதில், எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணி அமர்த்த வேண்டும். கிராம மக்களின் மருத்துவ சேவையை மேம்படுத்தி, அவர்களுக்கு தரமான இலவச சிகிச்சை கிடைப்பதற்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறைந்தபட்சம் 5 செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணி அமர்த்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

The post கரூரில் செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu Government Nurses' Unions ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்