×

தாந்தோணிமலை பகுதியில் இன்று மின்தடை

 

கரூர், ஜூலை 27: கரூர் தாந்தோணிமலை பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரூர் மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கரூர் கோட்டத்துக்கு உட்பட்ட தாந்தோணிமலை துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 27) மின்மாற்றியை, பவர் மின்மாற்றியாக தரம் உயர்த்துவதற்கான மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்தி கிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஏமூர், மின் நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவப்பட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தாந்தோணிமலை பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Dandonimalai ,Karur ,Karur Power Board ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...