×

வீட்டிற்குள் புகுந்த 5 அடி நல்லபாம்பு

 

திருச்சுழி, ஜூலை 27: காரியாபட்டியில் வீட்டிற்குள் நுழைந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் பாண்டியன் நகர் பகுதியில் ரேணுகா என்பவரின் வீட்டிற்குள் பாம்பு புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காரியாபட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த காரியாபட்டி தீயணைப்புத் துறையின் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான வீரர்கள் வீட்டிற்குள் இருந்த சுமார் ஐந்து அடி நீள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.

The post வீட்டிற்குள் புகுந்த 5 அடி நல்லபாம்பு appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Kariyapatti ,Govt ,
× RELATED கணக்கனேந்தல் கிராமத்தில் பாழடைந்து...