×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம்: எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார்

மதுராந்தகம்: கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, எல்.எண்டத்தூர் ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாமை சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எல்.எண்டத்தூர் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நேற்று காலை மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.

இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் தம்பு தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நாராயணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட முதியோர், கிராம பொதுமக்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். 100க்கும் மேற்பட்டோர் கண்புரை லேசர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், துணை பெருந்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன், மாவட்ட கவுன்சிலர் மாலதி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள நூலகத்ததை, சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்து தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். மேலும், ரூ.10 ஆயிரம் செலுத்தி எண்டத்தூர் கிளை நூலகத்திற்கு தன்னை நூலகப் புரவலராக இணைத்துக் கொண்டார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம்: எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Sundar ,Madhurandakam ,Sundar MLA ,L. Endathur panchayat.… ,
× RELATED உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றிய...