×

வரும் 31ம் தேதி வரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: ஓரகடத்தில் உள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக துவங்கவுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 100 சதவீதம் சேர்க்கை மேற்கொள்ளும் வகையில், 31.7.2023 வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதன்படி, பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகலாம்.

மேலும், கம்மியர் மோட்டார் வாகனம், குளிர்பதனம் மற்றும் தட்ப வெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பவியலாளர், கம்மியர் மின்னணுவியல், மெக்கானிக் எலக்ட்ரிக் வண்டி, அட்வான்ஸ்டு மிஷினிங் டெக்னிசியன் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு, இரண்டு ஆண்டு கால பயிற்சி மற்றும் மேனுபேக்சரிங் ப்ராசஸ்கண்ட்ரோல் & ஆட்டோமேசன் மற்றும் (இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன்) பிரிவிற்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த அரசு தொழிற்பயிற்சியில் சேர்வதற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு, பயிற்சி காலத்தில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.750, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, 2 செட் சீருடை, தையற்கூலி, இலவச புத்தகங்கள், இலவச சேப்டி ஷூ, இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஒரகடம். தொலைபேசி எண்:63790 90205, 81223 74342 / 8608728554 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post வரும் 31ம் தேதி வரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Government Vocational Training Center ,Kanchipuram ,Vocational Training Center ,Oragadam ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...