×

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் முதியவருக்கு இதய துடிப்பை சீர் செய்யும் நவீன கருவி பொருத்தி சாதனை: டாக்டர் சத்தியநாராயணன் பாராட்டு

செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனை, முதியவருக்கு இதய துடிப்பை சீர் செய்யும் நவீன கருவி பொருத்தி சாதனை படைத்துள்ளது. காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில், வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஏற்படும் இதய துடிப்பால், பலமுறை சுய நினைவு இன்றி பாதிப்புக்கு உள்ளான ராஜாமணி (82) முதியவருக்கு, மருத்துவர்கள் இதய துடிப்பை சீர் செய்யும் 3 செ.மீ.அளவிலான நவீன கருவியினை சிறிய அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை நிகழ்த்திய மருத்துவர்களை அம்மருத்துவமனை தலைவர் டாக்டர் சத்தியநாராயணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு ராஜாமணி (82) என்ற முதியவர் சுய நினைவின்றி அனுமதிக்கப்பட்டார். இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவருக்கு அடிக்கடி சுய நினைவு இழப்பு ஏற்பட்டது. கடந்த 2 மாதத்திற்கும் மேலாக இந்த நிலை இருந்து இதற்கு மண்ணிவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் ஆகாத நிலையில் இங்கு அனுமதிக்கபட்டார். அதனை தொடர்ந்து ராஜாமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதய துடிப்பு அளவு அதிகமாக இருப்பதையும், இதன் காரணமாக ஏற்படும் அதிக படபடப்பு காரணமாக நோயாளிக்கு நினைவு இழப்பு ஏற்படுவதை கண்டறிந்தனர்.

அதனை சீர்செய்யும் வகையில் சிகிச்சை மேற்கொண்டனர். நோயாளி ராஜாமணியின் உடலில் நெஞ்சு மேல்பகுதியின் இடது தோல்பட்டையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்து நெஞ்சு மேல்பகுதியின் உட்புறத்தில் சிறிய அளவிலான நவீன மின் கருவி ஒன்றை பொருத்தினர். அதன் மூலம் நோயாளியின் இதய துடிப்பு சீர் செய்யப்பட்டு சகஜ நிலைக்கு கொண்டுவரப்பட்டு குணமடைந்தார். 82 வயதுக்கு மேல் உடைய ஒருவருக்கு இந்த முறை அறுவை சிகிச்சை செய்ய பட்டது முதன் முதலில் இம்மருத்துவமனையில் தான். இதற்காக மருத்துவர்களை பாராட்டுகிறேன். இம்மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் டாக்டர் வி.பி.சந்திரசேகரன் மேற்பார்வையில், அறுவை சிகிச்சை பிரிவு 2 தலைவர் மூர்த்தி தலைமையில் ஸ்ரீராம் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு ராஜாமணியை குணப்படுத்தினர்.

The post காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் முதியவருக்கு இதய துடிப்பை சீர் செய்யும் நவீன கருவி பொருத்தி சாதனை: டாக்டர் சத்தியநாராயணன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Dr. ,Sathyanarayanan ,Kattankulathur SRM Hospital ,Chengalpattu ,Kathankulathur SRM Hospital ,Kathankulathur ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!