×

சூனாம்பேடு ஊராட்சியில் மேல்கூரை இடிந்து விழும் நிலையில் பள்ளி: புதிதாக கட்டித்தர கலெக்டரிடம் கோரிக்கை

செங்கல்பட்டு: சூனாம்பேட்டில் மேல்கூரை இடிந்து விழுந்து வருகிறது. எனவே, இப்பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கலெக்டரிடம் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர் அளித்துள்ள கோரிக்கை மனு: செங்கல்பட்டு மாவட்டம், தொழுப்பேடு ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்த பலர் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் என பெரிய அளவில் முன்னேறியுள்ளனர்.

இப்பள்ளி விளையாட்டு மைதானத்தோடு கூடிய 86 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பள்ளி ஏற்கனவே ஒரே ஒரு கட்டிடமாக அமைந்துள்ளது. தற்போது அந்த கட்டிடமும் மழைநீர் தேங்கி உள்பக்கமாக சிமென்ட் தளங்கள் விரிசல் விட்டு மேல்கூரைகள் உதிர்ந்து கொட்டி நாளுக்கு நாள் பழுதடைந்து வருகிறது. பள்ளி பழுதடைந்துள்ளதால், மழைக்காலங்களில் எந்த நேரத்திலும் ஏதும் அசம்பாவிதம் நடத்து விடுமோ என்று அச்ச உணர்வோடு குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

பள்ளியில் போதுமான இடவசதி இருந்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவையான கழிவறை குடிதண்ணீர் வசதி அமைத்து தராமல் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்பட்டு வரும் பெற்றோர் 50க்கும் மேற்பட்டோர் எங்களின் குழந்தைகளை பயமின்றி பள்ளிக்கு அனுப்புவதற்காகவும், எங்கள் பிள்ளைகளின் நலன் கருதி, தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத கழிவறை, 10, ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி அமைத்து, மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சூனாம்பேடு ஊராட்சியில் மேல்கூரை இடிந்து விழும் நிலையில் பள்ளி: புதிதாக கட்டித்தர கலெக்டரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Soonambedu Panchayat ,Chengalpattu ,Soonampet ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை