×

மோடியை கொல்ல வந்ததாக என்கவுன்டர் ஓய்வு பெற்ற டிஎஸ்பியை விடுவித்தது குஜராத் ஐகோர்ட்

அகமதாபாத்: மோடியை கொல்ல வந்ததாக கூறி நடந்த என்கவுன்டரில் ஓய்வு பெற்ற டிஎஸ்பியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு ஜனவரியில் அகமதாபாத்தில் நடந்த என்வுன்டரில் இளைஞர் சாதிக் ஜமால்(19) சுட்டு கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட சாதிக் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்தவர், அவர் அப்போதைய முதல்வர் மோடி மற்றும் இதர பாஜ தலைவர்களை கொல்லும் சதி திட்டத்துடன் வந்திருந்தார் என போலீசார் தெரிவித்தனர். இது போலி என்கவுண்டர் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த இர்ஷதலி அன்வர் அலி என்பவர் உட்பட 8 போலீசார் மீது 2012ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு நடந்து வந்தபோது, ஒருவர் இறந்தார். 7 பேரில் 6 பேரை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. ஓய்வு பெற்ற டிஎஸ்பி இர்ஷதலி மீது மட்டும் வழக்கு தொடர்ந்து நடந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கீதா கோபி வழக்கில் இருந்து இர்ஷதலியை விடுதலை செய்தார். இதையடுத்து என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

The post மோடியை கொல்ல வந்ததாக என்கவுன்டர் ஓய்வு பெற்ற டிஎஸ்பியை விடுவித்தது குஜராத் ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Encounter ,Modi ,Gujarat ,Ahmedabad ,High Court ,Gujarat iCourt ,
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி...