×

மத்திய தகவல் ஆணையத்தில் 19,233 புகார்கள், மேல்முறையீடுகள் நிலுவை

புதுடெல்லி: மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலமாக அளித்த பதிலில், மத்திய தகவல் ஆணையத்தில் அனுமதிக்கப்பட்ட 10 தகவல் ஆணையர் எண்ணிக்கைக்கு மாறாக 4 தகவல் ஆணையாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை ஆணையத்தில் 19,233 புகார்கள் மற்றும் மேல்முறையீடுகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இது கடந்த 2021-2022ம் ஆண்டில் 29,213 ஆக இருந்தது. 2020-2021ம் ஆண்டில் 38,116, 2019-2020ம் ஆண்டில் நிலுவையில் இருந்த புகார்கள் எண்ணிக்கை 35,718ஆக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மத்திய தகவல் ஆணையத்தில் 19,233 புகார்கள், மேல்முறையீடுகள் நிலுவை appeared first on Dinakaran.

Tags : Central Information Commission ,New Delhi ,Lok Sabha ,Union Minister of State for Personnel and Welfare ,Jitendra Singh ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை