×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் ஆண்டார்குப்பம், தச்சூர் கூட்டு சாலை, அமிர்தா நல்லூர், அழிஞ்சிவாக்கம், துரை நல்லூர், சின்னபேடு, ஆகிய சுற்று வட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் டி.பி, சுகர், காய்ச்சல், இரும்பல் உள்ளிட்ட சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து அவசர சிகிச்சைக்காக இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட, பகல் நேரங்களில் மருத்துவமனை சரிவர இயங்குகிறதா எனவும் மருத்துவர்கள், என பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான துரைசந்திரசேகர் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

இந்த சுகாதார நிலையத்தில், புதிய மருத்துவமனை கட்டிடம், சுற்றுச்சுவர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து விரைவில் புதிய மருத்துவமனை கட்டிடம், மற்றும் சுற்றுச்சுவர் கட்டிடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உறுதியளித்தார். பொன்னேரி வட்டாட்சியர் செல்வம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், மற்றும் அரசு மருத்துவர்கள், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MLA ,Primary Health Centre ,Kummidipoondi ,Panchetti ,Kavarappet ,Tiruvallur district ,Andarkuppam ,Thachur ,primary health center ,Dinakaran ,
× RELATED பஜார் நெடுஞ்சாலையில் அடைப்புகள்...