×

விமானத்தில் பயணிக்க அனுமதிமறுக்கப்பட்ட மாணவருக்கு ரூ.5.10 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு

திருவள்ளூர்: ஆவடியை சேர்ந்த ஜூஜார் சிங் என்ற மாணவர் கடந்த 2021ம் ஆண்டு புது டெல்லியில் இருந்து சிகாகோ செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தனியார் ஏஜென்ட் மூலம் முன்பதிவு செய்திருந்தார். எஃப் 1 விசாவில் பயணிப்பதற்காக முன்கூட்டியே டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த தம்மை, ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. கொரோனா கால கட்டத்தில் உயர்கல்விக்காக சிகாகோ விமானத்தில் பயணிப்பதற்காக வந்த மாணவர் ஜூஜார் சிங், அதிக லக்கேஜ் கொண்டு வந்ததாகவும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லை என கூறி ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்த பணம் ரூ.41,133, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ. 20 லட்சம் சிரமத்தை ஏற்படுத்தியதற்காக ரூ..10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என திருவள்ளூர் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் ஜூஜார் சிங் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தம்மை மனிதாபிமானத்தோடு நடத்தவில்லை எனவும், வேண்டுமென்றே தம்மிடம் ஆவணங்களை கேட்டு அலைக்கழித்து, எடை அதிகம் கொண்டு வந்துள்ளதாக கூறி விமானத்தில் பயணிக்க வடாமல் தடுத்து விலங்கினை போல நடத்தப்பட்டதாக புகார் தெரிவித்திருந்தார். கடந்த ஓராண்டாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த திருவள்ளூர் நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் லதா மகேஸ்வரி, பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் மன உளைச்சல் மற்றும் சிரமத்தை ஏற்படுத்தியதற்காக ரூ.5 லட்சம், வழக்கு செலவிற்காக ரூ. 10 ஆயிரம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

The post விமானத்தில் பயணிக்க அனுமதிமறுக்கப்பட்ட மாணவருக்கு ரூ.5.10 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tribunal ,Tiruvallur ,Jujar Singh ,Aavadi ,New Delhi ,Chicago ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...