×

பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை தேர்வு எப்போது? பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு இடைப் பருவத் தேர்வுகள் மற்றும் யூனிட் தேர்வுகளை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து, அதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகள் இந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. தற்போது அந்த மாணவ-மாணவியருக்கு இடைப் பருவத் தேர்வுகள் மற்றும் யூனிட் தேர்வுகளை நடத்தி அவர்களின் கற்றல் திறனை அறிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி, பிளஸ்1 வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரையும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை படிக்கின்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரையும் இடைப் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். பிளஸ் 2 வகுப்புக்கு 28ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை யூனிட் தேர்வுகளை நடத்த வேண்டும். அதேபோல 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு இம்மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை யூனிட் தேர்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை தேர்வு எப்போது? பள்ளி கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,Dinakaran ,
× RELATED இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வட்டார...