புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம்ஆத்மி கட்சியால் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் ராகவ் சதா. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து வரும் போது ஒரு காகம் அவரை துரத்தி துரத்தி கொத்தியது. இந்த படத்தை நேற்று பா.ஜ டிவிட்டரில் வெளியிட்டு வைரல் ஆக்கியது.
காகத்தால் கொத்துப்படும் ராகவ் சதா எம்பியை கேலி செய்யும் வகையில்,’ நீங்கள் பொய் சொன்னால் காகம் உங்களைத் தாக்கும்’ என்று பா.ஜ டிவிட் செய்தது. பா.ஜவின் டிவிட்டிற்கு ராகவ் சதா எம்பி ராமாயணத்தை குறிப்பிட்டு பதில் அளித்தார். அதில்,’மனிதகுலத்திற்கு கேடு விளைவிக்கும் கலியுகம் வந்தால் அன்னம் தானியங்களை உண்ணும், காகம் முத்துக்களை விருந்தாக சாப்பிடும் என்று ராம பிரான், சீதாவிடம் கூறினார். இன்று வரை கேட்டதுதான் இன்று பார்த்ததும்’ என்று அவர் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
The post காகம் கொத்திய படம் வைரலாக்கிய பா.ஜ கலியுகம் வந்தால் இப்படித்தான் நடக்கும்: பா.ஜவை விமர்சனம் செய்த ஆம்ஆத்மி எம்பி appeared first on Dinakaran.