×

கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் அமையுள்ள மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார். சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் நேற்று சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும் மற்றும் அப்பணிகளுடன் சேர்ந்து நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகளையும், முடிச்சூரில் புதிதாக அமையவுள்ள ஆம்னி பேருந்து நிறுத்திமிடத்தில் நடைபெறும் பணிகள் குறித்தும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமையுள்ள மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை செய்தார்.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, சிஎம்டிஏ தலைமை திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Clambakem Bus Terminal ,CHENNAI ,Minister ,Shekharbabu ,Klampakkam bus terminal ,Dinakaran ,
× RELATED மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...