×

சில்லிபாயிண்ட்…

* ஜப்பான் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி (2வது ரேங்க்) ஜோடி 21-16, 11-21, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் கர்னன்டோ லியோ ரோலி – மார்ட்டின் டேனியல் (11வது ரேங்க்) ஜோடியை வீழ்த்து 2வது சுற்றுக்கு முன்னேறியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் லக்‌ஷயா சென் 21-15, 12-21, 24-22 என்ற செட் கணக்கில் சக இந்திய வீரர் பிரியன்சு ராஜ்வத்தை வீழ்த்தினார். மிதுன் மஞ்சுநாத், பி.வி.சிந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

* தியோதர் டிராபி ஒருநாள் போட்டித் தொடரில் மத்திய மண்டலத்துடன் நேற்று மோதிய வடக்கு மண்டலம் 48 ரன் வித்தியாசத்தில் வென்றது. வடக்கு மண்டலம் 50 ஓவரில் 307/8 (பிரப்சிம்ரன் 121, கேப்டன் நிதிஷ் ராணா 51, மன்தீப் 43); மத்திய மண்டலம் 47.4 ஓவரில் 259 ரன் ஆல் அவுட் (ஷிவம் சவுதாரி 51, யஷ் துபே 78, உபேந்திரா 52).

* மேற்கு மண்டல அணியுடன் நடந்த போட்டியில் தென் மண்டலம் 12 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. தென் மண்டலம் 46.4 ஓவரில் 206 ஆல் அவுட் (கேப்டன் மயாங்க் அகர்வால் 98); மேற்கு மண்டலம் 36.2 ஓவரில் 194 ஆல் அவுட் (சர்பராஸ் கான் 42, அதித் சேத் 40, ஷிவம் துபே 29).

* கோலாலம்பூரில் நடந்த டி20 உலக கோப்பைக்கான ஆசிய பி பிரிவு தகுதிச்சுற்று லீக் ஆட்டத்தில், சீனாவுக்கு எதிராக மலேசிய அணி வேகப் பந்துவீச்சாளர் சியாஸ்ருல் இட்ருஸ் 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி உலக சாதனை படைத்தார். சர்வதேச டி20ல் ஒரு பந்துவீச்சாளர் 7 விக்கெட் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். 7 விக்கெட்டும் கிளீன் போல்டு என்பது குறிப்பிடத்தக்கது. சீனா 23 ரன்னில் ஆல் அவுட்டானது. மலேசியா 4.5 ஓவரில் வெற்றியை வசப்படுத்தியது.

* சீனாவின் ஹுவாங்ஸூ நகரில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்க இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

* ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, நவராத்திரி கொண்டாட்டம் காரணமாக அக்.15க்கு பதிலாக அக்.14ம் தேதிக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Tags : Japan Open ,India ,Satviksairaj ,Chirag Shetty ,Sillypoint… ,Dinakaran ,
× RELATED டெல்லியில் வரும் 19ம் தேதி இந்தியா...