×

பாகிஸ்தான் 563/5: அப்துல்லா 201, ஆஹா 132*

கொழும்பு: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், அப்துல்லா ஷபிக் – ஆஹா சல்மான் ஜோடியின் அபாரமாக ஆட்டத்தால் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 563 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. எஸ்எஸ்சி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்திருந்தது. அப்துல்லா 87 ரன், கேப்டன் பாபர் 28 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

பாபர் 39 ரன், சவுத் ஷகீல் 57 ரன்னில் வெளியேற, சர்பராஸ் அகமது 14 ரன் எடுத்து காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் அபாரமாக விளையாடிய அப்துல்லா இரட்டை சதம் விளாசினார். அவர் 201 ரன் எடுத்து (326 பந்து, 19 பவுண்டரி, 4 சிக்சர்) ஜெயசூரியா பந்துவீச்சில் மதுஷங்காவிடம் பிடிபட்டார். 3ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 563 ரன் குவித்துள்ளது. ஆஹா சல்மான் 132 ரன், முகமது ரிஸ்வான் 37 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, பாகிஸ்தான் 397 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் இலங்கை அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

The post பாகிஸ்தான் 563/5: அப்துல்லா 201, ஆஹா 132* appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Abdullah ,Aha ,Colombo ,Sri Lanka ,Abdullah Shafiq ,Aha Salman ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26ல் நடந்த...