×

மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

ஆவடி: மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆவடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான இமாக்குலேட் இருதய மேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 687 மாணவிகளுக்கு ரூ.34 லட்சத்து 29 ஆயிரத்து 504 ல் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். ஆவடி நாசர் பேசுகையில், தமிழகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

அதில் 40 விழுக்காடு மக்கள் பள்ளிக்கு வருவதில்லை என்றும் ஒரு சிலர் தாமதமாக வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையறிந்த முதல்வர் பல இடங்களில் ஆய்வு நடத்தினார். அதன் பிறகு காலை சிற்றுண்டி உணவு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் தற்போது 100 சதவீதமானவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். இந்தியாவின் தேசத்தந்தையாக கருதப்படும் மகாத்மா காந்தி அவரது சுயசரிதையை குஜராத்தி மொழியில் எழுதினார். மேலும் ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதத்தை தனது தாய்மொழியான வங்க மொழியில் எழுதினார். மாணவர்களும் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார். இதில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி, மாநகர செயலாளர் சன்பிரகாஷ், பகுதி செயலாளர்கள், ராஜேந்திரன், உட்பட கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Legislature ,S.M. Nasar ,Tiruvallur District School Education Department ,Dinakaran ,
× RELATED 195 கிலோ கஞ்சா அழிப்பு