×

புதிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: புதிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உயர்கல்வியில் சிறந்து விளங்கி, 2023-ல் தேசிய நிறுவன தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி உயர் கல்வியில் முதலிடத்தைப் பெற்ற சென்னை பல்கலைக்கழகத்திற்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர்; தமிழகத்தில் இருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களும் அதிகமாக வெற்றி பெற்று உலகமெங்கும் சேவையாற்றும் நிலையில் தயாராக உள்ளன.

மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வேண்டும். மாணவர்கள் அதிகமாக கல்வி பயில பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது போதிய தொழிற்சாலை இல்லாத நிலை ஏற்படுவதினால் தொழிற்சாலைகள் முன்னேற்றம் அடையாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கின்றது. இதனால் தான் ஏராளமானோர் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; புதிய கல்விகொள்கை புரட்சிகரமானது; புதிய இந்தியாவை நிர்மாணிக்க வல்லது. உயர்கல்வி நிலையங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்போடு இருந்தால் மட்டுமே உயர்கல்வியில் சிறந்த விளங்க முடியும்.

தமிழ் பழமையான மொழி, தமிழில் அதிக ஆய்வு இதழ்கள் வரவேண்டும்; கணிதம் மீது மாணவர்களுக்கு பயம் உள்ளது, அதை போக்கும் கடமை ஆசிரியர்களிடையே உள்ளது. பொறியியல் பட்டதாரிகள் ரூ.12 ஆயிரம் ஊதியத்தில் வேலை செய்வது அவர்களின் சுயமரியாதைக்கு உகந்தது அல்ல, பொறியியல் பட்டதாரிகள் அவர்கள் தகுதிக்கு குறைவாக வேலைகளை செய்வது வேதனையாக உள்ளது எனவும் கூறினார்.

The post புதிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor R. N.N. Ravi ,Chennai ,Governor ,R.R. N.N. Ravi ,Tamil Nadu ,
× RELATED பொங்கல் பண்டிகை: அதிகக் கட்டணம்...