×

மைக் துண்டிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது!: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் கார்கேவை பேச விடாமல் தடுப்பதா?..திருச்சி சிவா கடும் தாக்கு..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும்போது தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்துவதாக திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று பழங்குடியினர் சட்ட திருத்த மசோதாவின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் எழுந்து பேச முயன்றனர். மல்லிகார்ஜுன கார்கேவின் மைக்கின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் அவரது பேச்சு சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கேட்கவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கார்கே பேசும்போது ஏன் மைக் அணைக்கப்பட்டது; யார் உத்தரவிட்டு மைக் அணைக்கப்பட்டது என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். அவையில் பேசிக்கொண்டு இருந்தபோது தனது மைக் அணைக்கப்பட்டது சுயமரியாதைக்கு விடுக்கப்பட்ட சவால் என்று எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது, மைக் துண்டிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும்போது தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தினர். கார்கே பேசிக்கொண்டு இருந்தபோதே அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவரை பேச விடாமல் தடுப்பதா?

எதிர்க்கட்சி தலைவர் பேச எழுந்தாலே ஆளுங்கட்சியினர் கூச்சலிடுவது வேதனை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. எதிர்க்கட்சி தலைவர் அவராக அமரும் வரை பேச அனுமதி அளிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும்போது நாடாளுமன்றத்துக்கு மோடி வரவேண்டியது அவசியம் எனவும் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post மைக் துண்டிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது!: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் கார்கேவை பேச விடாமல் தடுப்பதா?..திருச்சி சிவா கடும் தாக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Opposition ,Kharge ,Parliament ,Trichy Siva ,Delhi ,Rajya Sabha ,
× RELATED ராகுல்காந்தி மீதுள்ள அச்சம்...