×

கும்மிடிப்பூண்டியில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்க காதல் தம்பதிக்கு தடை

பொன்னேரி: கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்புகுளம் கிராமம், புதுத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (31). இவரது மனைவி மோகனாபிரியா. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள், அதே தெருவில் தங்களது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் காதல் திருமணம் செய்ததால், சுண்ணாம்புகுளம் பகுதியில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கிராம நிர்வாகிகள் தடை விதித்தனர். மேலும், கோயில் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு இத்தம்பதி வழங்கும் நன்கொடைகளை ஏற்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை பொன்னேரி சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனை இத்தம்பதி சந்தித்து வழங்கிய மனுவில், ‘எங்களை சுண்ணாம்புகுளம் கிராமத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அனுமதி வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ வலியுறுத்தி இருந்தனர். அம்மனுவை பெற்றுக் கொண்ட சார்ஆட்சியர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

The post கும்மிடிப்பூண்டியில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்க காதல் தம்பதிக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Balakrishnan ,Pudutheru, Sunnambukulam ,Mohanapriya ,
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...