×

பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை நாளை இயங்காது..!

பழனி: பழனி முருகன் கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். தரிசனத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை கோயிலுக்கு செல்ல படிப்பாதை யானை, பாதை பிரதான வழியாக உள்ளது.

அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. விரைவாகவும், இயற்கை அழகை ரசித்த படியும் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயிலில் செல்லலாம். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப் கார் தினமும் பிற்பகலில் ஒரு மணி நேரமும் மாதத்தில் ஒருநாளும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

ரோப்கார் சேவை ஒரு சில நிமிடங்களில் மலை கோயிலின் உச்சிக்கு பக்தர்களை அழைத்துச் செல்வதால் பக்தர்கள் மத்தியில் ரோப் கார் சேவை பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயிலில் ரோப் கார் வசதி நாளை இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை நாளை இயங்காது..! appeared first on Dinakaran.

Tags : Palani Murugan Temple Rope Car Service ,Palani ,Palani Murugan Temple ,Murugan ,Dinakaran ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...